பெங்களூரு வழியாக செல்லும் சென்னை சென்டிரல்-சாய்நகர் ஷீரடி ரெயில் ரத்து
பெங்களூரு வழியாக செல்லும் சென்னை சென்டிரல்-சாய்நகர் ஷீரடி ரெயில் ரத்து செய்யப்பட உள்ளது.
பெங்களூரு: தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:--பிக்வான்- வாசிம்பே இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருவதால் பெங்களூரு வழியாக செல்லும் சென்னை சென்டிரல்- சாய்நகர் ஷீரடி ரெயில் வருகிற 27-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அதுபோல சாய்நகர் ஷீரடி- சென்னை சென்டிரல் ரெயிலும் வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரை ரத்தாகிறது.
தவுனத்-குருத்வாடி இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணியால் யஷ்வந்தபுரம்-அகமதாபாத் இடையே இயங்கும் வாராந்திர ரெயில் வருகிற 31-ந் தேதி, அடுத்த மாதம் 7-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது. அகமதாபாத்-யஷ்வந்தபுரம் ரெயில் அடுத்த மாதம் 2, 9-ந் தேதிகளில் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு தென்மேற்கு ரெயில்வே கூறியுள்ளது.
Related Tags :
Next Story