"சென்னை பயணம் மறக்க முடியாததாக அமைந்தது": பிரதமர் மோடி நெகிழ்ச்சி டுவீட்


சென்னை பயணம் மறக்க முடியாததாக அமைந்தது: பிரதமர் மோடி நெகிழ்ச்சி டுவீட்
x

சென்னை பயணம் மறக்க முடியாததாக அமைந்தது என்று பிரதமர் மோடி தன்னுடைய டுவீட்டரில் பகிர்ந்துள்ளார்.

சென்னை,

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று சென்னை வந்திருந்தார். நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற 'செஸ்' ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று தங்கினார்.

தொடர்ந்து, தமிழ்நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் இன்று பிரதமர் மோடி பங்கேற்றார். விழாவில் பல்கலைக்கழக அளவில் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி படிப்புகளில் முதலிடம் பெற்ற 69 மாணவ-மாணவிகளுக்கு பிரதமர் மோடி தங்கத்தால் ஆன பதக்கங்களை வழங்கினார்.

விழாவுக்குப் பின்னர், பயணத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்னை விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து அகமதாபாத்துக்கு புறப்பட்டுச்சென்றார்.

இந்த நிலையில், "சென்னை பயணம் மறக்க முடியாததாக அமைந்தது" என்று பிரதமர் மோடி தன்னுடைய டுவீட்டரில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். மேலும், சென்னை சுற்றுப்பயண வீடியோவையும் பிரதமர் டுவீட்டரில் வெளியிட்டு உள்ளார்.

1 More update

Next Story