பிரதமர் மோடியுடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு: கூடுதல் மருத்துவ கல்லூரிகள் தேவை என வலியுறுத்தல்
ஆந்திராவில் கூடுதல் மருத்துவ கல்லூரிகள் தேவை என முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினார்.
புதுடெல்லி,
டெல்லி சென்றுள்ள ஆந்திர மாநில ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவரும முதல்-மந்திரியுமான ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
அப்போது பிரதமருக்கு வெங்கடாஜலபதி சிலையை பரிசாக வழங்கினார். பின்னர் ஆந்திராவின் நீர்பாசன திட்டத்திற்காக மாநில அரசு இதுவரை ரூ.2,900 கோடி செலவு செய்துள்ளது என்றும் இதனை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் மாநிலத்திற்கு கூடுதலாக 14 மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
Related Tags :
Next Story