புதுச்சேரியில் விரைவில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் விடுபட்ட திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும்.
புதுச்சேரி,
புதுவை பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் குழந்தைகள் தினவிழா காமராஜர் மணிமண்டபத்தில் நேற்று நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு சிறந்த படைப்பாளி குழந்தைகள், நீட் தேர்வில் வெற்றிபெற்ற அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்தார். பின்னர் விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
புதுச்சேரியில் விடுபட்ட திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும். விரைவில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது. இன்னும் ஓரிரு மாதத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் (மடிக்கணினி) வழங்கப்படும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.
Related Tags :
Next Story