1 முதல் 8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ் - புதுச்சேரி கல்வித் துறை உத்தரவு

1 முதல் 8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ் - புதுச்சேரி கல்வித் துறை உத்தரவு
x

கோப்புப்படம்

1 முதல், 8-ம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி தரப்பட வேண்டும் என்று புதுச்சேரி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி,

1 முதல், 8-ம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி தரப்பட வேண்டும் என்று புதுச்சேரி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி, ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், நடப்பு கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல், 8-ம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி தரப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 9-ம் வகுப்பு மாணவர்கள் ஆண்டு இறுதித்தேர்வில் 35 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால்தான் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story