21 நாட்களாக நீடித்த உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்ட காலநிலை ஆர்வலர்

லடாக் யூனியன் பிரதேச மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் மோடிக்கு சோனம் வாங்சுக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
21 நாட்களாக நீடித்த உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்ட காலநிலை ஆர்வலர்
Published on

லே:

லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, காலநிலை ஆர்வலரும் கல்வி சீர்திருத்தவாதியுமான சோனம் வாங்சுக், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அவரது போராட்டத்திற்கு ஆதரவாக ஏராளமான மக்கள் திரண்டனர்.

இந்நிலையில் சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரத போராட்டத்தை 21-வது நாளான இன்று முடித்துக்கொண்டார். பின்னர் பேசிய அவர், முதற்கட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் முடிவடைவதாகவும், ஆனால் தனது போராட்டம் முடிவுக்கு வரவில்லை என்றும் தெரிவித்தார். இந்த உண்ணாவிரதத்தின் முடிவு, போராட்டத்தின் புதிய கட்டத்தின் தொடக்கம் என்றும் வாங்சுக் குறிப்பிட்டார்.

முன்னதாக, லடாக் யூனியன் பிரதேச மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் மோடிக்கு புதிய வேண்டுகோளை முன்வைத்தார். மேலும், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தங்கள் வாக்குரிமையை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com