திருப்பதியில் ஒரே நாளில் ரூ.4.24 உண்டியல் காணிக்கை வசூல்


திருப்பதியில் ஒரே நாளில் ரூ.4.24 உண்டியல் காணிக்கை வசூல்
x

கோவிலுக்கு வெளியே சுமார் 15 மணி நேரம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையிலும், திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. வார இறுதிகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

கோவிலுக்கு வெளியே சுமார் 15 மணி நேரம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பதியில் நேற்று 72,195 பேர் தரிசனம் செய்த நிலையில், ரூ 4.24 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.


Next Story