கல்லூரி மாணவர் கொலை; 2 பேரிடம் போலீஸ் விசாரணை


கல்லூரி மாணவர் கொலை;  2 பேரிடம் போலீஸ் விசாரணை
x

கல்லூரி மாணவரை கொலை வழக்கில் 2 பேரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு: பெங்களூரு கே.ஜி.ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு படித்து வந்த அர்பாஜ் நேற்று முன்தினம் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

கல்லூரியில் நடந்த கலை நிகழ்ச்சியின் போது நடனமாடும் விவகாரத்தில் முகமது உள்ளிட்டோருக்கும், அர்பாஜிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருப்பது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை பிடித்து கே.ஜி.ஹள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிலரை கைது செய்ய போலீசார் களமிறங்கியுள்ளனர்.

1 More update

Next Story