தசை சிதைவு நோய்க்கு கல்லூாி மாணவர் பலி
மங்களூரு அருகே, தசை சிதைவு நோய்க்கு கல்லூாி மாணவர் பலியானார்.
மங்களூரு;
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு, கல்லடுக்கா சூரிகுமேரி பகுதியில் வசித்து வருபவர் கணேஷ் பட். விவசாயி. இவரது மகன் ஆதித்யா (வயது 21). பட்டதாரியான இவர், வங்கி தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வங்கி தேர்வு எழுதுவதற்காக சென்றபோது, அங்கு வைத்து அவருக்கு முச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தேர்வு எழுதாமல் வீட்டிற்கு வந்துள்ளார்.
இதையடுத்து அவரது பெற்றோர் அவரை சிகிச்சைக்காக புத்தூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஆதித்யாவிற்கு தசை சிதைவு நோய் இருப்பதை கண்டறிந்தனர். இதைகேட்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைதொடர்ந்து ஆதித்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஆதித்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
Related Tags :
Next Story