ஆந்திராவில் இரு கட்சிகள் இடையே மோதல்


ஆந்திராவில் இரு கட்சிகள் இடையே மோதல்
x
தினத்தந்தி 6 Sep 2023 5:59 AM GMT (Updated: 6 Sep 2023 6:47 AM GMT)

தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்.சி.பி. கட்சியினர் ஒருவரையொருவர் கற்களை வீசு தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமராவதி,

ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் நாரா லோகேஷ் 'யுவகலம்' என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், ஆந்திரா, பீமாவரம் நகரில் நாரா லோகேஷ் நடத்திய பேரணியின் போது ஒய்.சி.பி. கட்சியினர் அங்கு கட்சி கொடியுடன் வந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடியடி நடத்தி மோதலை கட்டுப்படுத்தினர். அதன்பின், இருக்கட்சியினரையும் கலைத்து லோகேஷ் பேரணி முன்னோக்கி செல்ல ஏற்பாடு செய்தனர். இந்த தாக்குதலில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் சிலர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த மோதல் சம்பவம் குறித்து ஆந்திரா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story