நிரம்பி வழியும் சிறைகள்; நாடாளுமன்ற நிலைக்குழு கவலை - கைதிகளை வேறு சிறைகளுக்கு மாற்ற பரிந்துரை


நிரம்பி வழியும் சிறைகள்; நாடாளுமன்ற நிலைக்குழு கவலை - கைதிகளை வேறு சிறைகளுக்கு மாற்ற பரிந்துரை
x

Image Courtesy : ANI

சிறைகளின் கூட்ட நெரிசல் ஒரு அழுத்தமான கவலையாக மாறியுள்ளது என நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

பா.ஜனதா எம்.பி. பிரிஜ்லால் தலைமையிலான உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு நாடு முழுவதும் சிறைகள் நிரம்பி வழிவது குறித்தும், நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதம் குறித்தும் கவலை வெளியிட்டு உள்ளது.

இது தொடர்பாக நிலைக்குழுவின் அறிக்கையில், 'சிறைகளின் கூட்ட நெரிசல் மற்றும் தாமதமான நீதி பற்றிய பிரச்சினை ஒரு அழுத்தமான கவலையாக மாறியுள்ளது. இது கைதிகள் மற்றும் ஒட்டுமொத்த குற்றவியல் நீதி அமைப்பு இரண்டுக்கும் தொடர்ச்சியான விளைவுகளுக்கு வழிவகுக்கிறது' என கூறியுள்ளது.

கூட்ட நெரிசல் மிகுந்த சிறைகளில் இருக்கும் கைதிகளை, அதே மாநிலத்திலோ அல்லது பிற மாநிலங்களிலோ உள்ள காலி அறைகள் உள்ள மற்ற சிறைகளுக்கு மாற்றலாம் என பரிந்துரைத்துள்ள இந்த குழுவினர், இது தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தலாம் என்றும் கூறியுள்ளது.

இதைப்போல சிறைகளில் பெண் கைதிகளுக்கு பிறக்கும் குழந்தைகளை 12 வயது வரை தாயுடனே வசிக்க அனுமதிக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ள நிலைக்குழு, அதற்காக சிறந்த சூழலை சிறைகளில் ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.


Next Story