நாடு முழுவதும் தலித், பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: கார்கே குற்றச்சாட்டு


நாடு முழுவதும் தலித், பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: கார்கே குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 Dec 2023 6:44 AM GMT (Updated: 8 Dec 2023 7:28 AM GMT)

பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களின் வாழ்வு பாதுகாப்பின்றி இருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் தலித் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் இது பாஜகவின் பிரித்தாளும் கொள்கை என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது, "தேசிய குற்றவியல் பதிவுகள் அமைப்பின் அறிக்கை புள்ளிவிவரங்களை மட்டும் காட்டவில்லை, பாஜக ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களின் வாழ்வு பாதுகாப்பின்றி இருப்பதையும் காட்டுகிறது. அநீதி, கொடுமைகள் மற்றும் அடக்குமுறை ஆகியவை கடந்த 10 ஆண்டுகளாக பாஜக செய்துவந்த சதித் திட்ட கொள்கையினால் ஏற்பட்டவை" என தெரிவித்துள்ளார். மேலும், தலித் மற்றும் பழங்குடியின மக்கள் பாஜக-ஆர்எஸ்எஸ் கட்சிகளின் அடக்குமுறையைத் தொடர்ச்சியாக எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story