சோனியா காந்தி குறித்து நிர்மலா சீதாராமன் வெளியிட்ட கருத்துகளை நீக்க வேண்டும் வெங்கையா நாயுடுவுக்கு காங்கிரஸ் கடிதம்


சோனியா காந்தி குறித்து நிர்மலா சீதாராமன் வெளியிட்ட கருத்துகளை நீக்க வேண்டும் வெங்கையா நாயுடுவுக்கு காங்கிரஸ் கடிதம்
x

மக்களவை உறுப்பினரான சோனியாவை, மாநிலங்களவையில் அவமதிப்பதை அனுமதிக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டு உள்ளார்.

புதுடெல்லி,

மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஜனாதிபதியை அவமதித்த விவகாரத்தை முன்வைத்து மாநிலங்களவையில் பேசிய மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன் மற்றும் பியூஸ் கோயல் ஆகியோர், சோனியாவை குற்றம் சாட்டினர். அவர் மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தினர்.இந்த நிலையில் சோனியா குறித்து மேற்படி மந்திரிகள் மாநிலங்களவையில் வெளியிட்ட கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அவைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஒரு அவையின் உறுப்பினர் ஒருவரை மற்றொரு அவையில் விமர்சிப்பது நாடாளுமன்ற மரபுகளுக்கு எதிரானது என கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்த கார்கே, அந்தவகையில்மக்களவை உறுப்பினரான சோனியாவை, மாநிலங்களவையில் அவமதிப்பதை அனுமதிக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டு உள்ளார்.எனவே இந்த விவகாரத்தில் நிர்மலா சீதாராமன் மற்றும் பியூஸ் கோயல் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தி உள்ளார்.


Next Story