காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது மீண்டும் லோக் அயுக்தாவில் புகார்


காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது மீண்டும் லோக் அயுக்தாவில் புகார்
x
தினத்தந்தி 1 Dec 2022 8:33 PM GMT (Updated: 1 Dec 2022 8:33 PM GMT)

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது மீண்டும் லோக் அயுக்தாவில் புகார் அளிக்கப்பட்டது.

சிக்கமகளூரு:-

சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஜேகவுடா. இவர் தனியார் டிரஸ்டிடம் இருந்து ரூ.123 கோடியில் 266 ஏக்கர் காபி தோட்டத்தை வழங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில், ராஜேகவுடா எம்.எல்.ஏ. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பெங்களூருவை சேர்ந்த விஜயானந்தா என்பவர் லோக் அயுக்தாவில் புகார் கொடுத்தார். இந்த நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜேகவுடா எம்.எல்.ஏ. மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றார். அப்போது அவர், முன்னாள் எம்.எல்.ஏ. ஜீவராஜ் வற்புறுத்தல் காரணமாக புகார் கொடுத்ததாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேகவுடா மீது மீண்டும் லோக் அயுக்தாவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக கொப்பாவை சேர்ந்த பா.ஜனதா தொண்டர் தினேஷ் என்பவர், ராஜேகவுடா எம்.எல்.ஏ. மீது புகார் கொடுத்துள்ளார். ஆனால் இதுகுறித்து இன்னும் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.


Next Story