வாஜ்பாய் நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை...!


வாஜ்பாய் நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை...!
x

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

புதுடெல்லி,

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 98-ஆவது பிறந்த நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள 'ஸதைவ அடல்' எனப்படும் அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முா்மு, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கா், பிரதமா் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நிதி மந்திரி நிா்மலா சீதாராமன், மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி ஹா்தீப் சிங் புரி உள்ளிட்டோா் மலா் மரியாதை செலுத்தினா்.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று (திங்கட்கிழமை) மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

காந்தி ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடம், சாந்தி வேனில் உள்ள முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவிடம், முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு சக்தி ஸ்தலத்திலும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு வீர் பூமியிலும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


Next Story