குஜராத் சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு


குஜராத் சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு
x

குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 1 மற்றும் 5-ந்தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

புதுடெல்லி,

182 உறுப்பினர் கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 1 மற்றும் 5-ந்தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை தொடங்கி விட்டன. இதனால் தேர்தல் களம் களைகட்டி வருகிறது. மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க ஆளும் பா.ஜனதா தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாஜகவுக்கு போட்டியாக காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் களம் காணுகின்றன.

குஜராத் சட்டசபை தேர்தலுக்கான தகுதி வாய்ந்த வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வந்தன. அதன்படி 43 பேர் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியல் காங்கிரஸ் கட்சியால் ஏற்கெனவே வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், குஜராத் சட்டசபை தேர்தலுக்கான 46 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாவது பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது.


Next Story