காங்கிரஸ் கட்சியால் 3 தலைமுறைக்கு சொத்து சேர்த்துள்ளோம்; முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் சர்ச்சை பேச்சு


காங்கிரஸ் கட்சியால் 3 தலைமுறைக்கு சொத்து சேர்த்துள்ளோம்; முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் சர்ச்சை பேச்சு
x

உழைக்காமல் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியால் 3 தலைமுறைக்கு சொத்து சேர்த்துள்ளோம் என்று முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.

பெங்களூரு:

டெல்லியில் அமலாக்கத்துறையினர், சோனியாகாந்தியிடம் விசாரணை நடத்தியதை கண்டித்து பெங்களூருவில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் பேசும்போது, 'காங்கிரஸ் கட்சியால் நாம் 2, 3 தலைமுறை உழைக்காமல் உட்கார்ந்து வாழும் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளோம். அதனால் சோனியா காந்திக்கு நாம் விசுவாசமாக இருக்க வேண்டும். அவருக்கு நாம் நன்றிக்கடன் செலுத்த வேண்டியது நமது கடமை' என்றார். ரமேஷ்குமாரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை பா.ஜனதா கடுமையாக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், "பதவியில் இருந்தபோது காங்கிரஸ் கட்சியினர் அதிகளவில் சொத்து சேர்த்துள்ளனர் என்பதை ரமேஷ்குமார் வெளிப்படையாக கூறியுள்ளார். இதற்காக அவரை பாராட்டுகிறேன். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியினர் 40 சதவீத கமிஷனர் பெற்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அதனால் பா.ஜனதாவை காங்கிரசார் விமர்சிக்க தகுதி இல்லை' என்றார்.

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறுகையில், 'காங்கிரஸ் மிகப்பெரிய அளவில் ஊழல்களை செய்துள்ளது என்பதை மேதாவி அரசியல்வாதியான ரமேஷ்குமார் ஒப்புக்கொண்டுள்ளார். காங்கிரசார் எந்த முகத்தை வைத்து கொண்டு மக்களிடம் வாக்கு கேட்பார்கள்' என்றார்.


Next Story