காங்கிரஸ் கண்டன பேரணி 'ராகுலை மீண்டும் முன்னிலைப்படுத்தும் முயற்சி' பா.ஜ.க. விளாசல்


காங்கிரஸ் கண்டன பேரணி ராகுலை மீண்டும் முன்னிலைப்படுத்தும் முயற்சி  பா.ஜ.க. விளாசல்
x

காங்கிரஸ் கண்டன பேரணி என்பது ராகுல்காந்தியின் மறுதொடக்கம் 4.0” என பாஜக விமர்சனம் செய்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் விலைவாசி உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் நேற்று பிரமாண்ட கண்டன பேரணி நடத்தியது. இதில் ராகுல் காந்தி கட்சித்தலைவர் பதவி ஏற்க ஆதரவு தெரிவிக்கும் பதாகைகள் காட்டப்பட்டன. இந்த நிலையில் காங்கிரசின் கண்டன பேரணி குறித்து பா.ஜ.க. கடுமையாக சாடியது.

இதையொட்டி அந்தக் கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், "இந்த பேரணி (சோனியா காந்தி) குடும்பத்தை காப்பாற்றத்தான். விலைவாசி உயர்வுக்கு எதிரானது அல்ல. அரசியலில் ராகுல்காந்தியை பலமுறை முன்னிலைப்படுத்திய நிலையில் மறுபடியும் முன்னிலைப்படுத்தும் முயற்சி இது. இது ராகுல்காந்தி மறுதொடக்கம் 4.0" என குறிப்பிட்டார்.


Next Story