75 சவரன் நகை கொடுத்தும் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தல்: பெண் தூக்கிட்டு தற்கொலை


75 சவரன் நகை கொடுத்தும் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தல்: பெண் தூக்கிட்டு தற்கொலை
x

திருமணத்தின்போது வரதட்சணையாக 75 சவரன் நகை கொடுத்துள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லம் அருகே உள்ள வண்டித்தனம் பகுதியை சேர்ந்த இளம்பெண் சஹானா ஷாஜி. இவருக்கும் கட்டக்கடா பகுதியை சேர்ந்த நவ்பல் என்ற இளைஞருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது மணமகன் குடும்பத்தினருக்கு வரதட்சணையாக 75 சவரன் நகை கொடுத்துள்ளனர். இந்த தம்பதிக்கு 2 வயதில் குழந்தை உள்ளது.

இதனிடையே, திருமணமானது முதல் கூடுதல் வரதட்சணை கொடுக்கும்படி சஹானாவை அவரது கணவர் நவ்பல்லும், மாமியார் சுமிதாவும் துன்புறுத்தி வந்துள்ளனர். சஹானாவை இருவரும் அடித்து தாக்கியுள்ளனர்.

கணவன், மாமியார் துன்புறுத்தலை சமாளிக்க முடியாமல் சஹானா குழந்தையுடம் வண்டித்தனத்தில் உள்ள தன் தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், நவ்பல் மனைவி சஹானாவை சந்திக்க வண்டித்தனத்திற்கு வந்துள்ளார். சகோதரனின் குழந்தைக்கு பிறந்தநாள் என்பதால் அதில் பங்கேற்க வரும்படி மனைவி சஹானாவை நவ்பல் அழைத்துள்ளார். இதற்கு சஹானா மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த நவ்பல் மனைவியை தாக்கிவிட்டு குழந்தையை தூக்கிச்சென்றுவிட்டார்.

இதனால், மனஉளைச்சல் அடைந்த சஹானா வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று சஹானாவின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story