கர்நாடகத்தில் புதிதாக 45 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 45 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் நேற்று 13 ஆயிரத்து 900 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 38 பேருக்கும், மைசூரு, ராமநகரில் தலா 2 பேருக்கும், கோலார், ஹாசன், பல்லாரியில் தலா ஒருவருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது 1,324 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் அரை சதவீதத்திற்கும் கீழ் உள்ளது.
பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 10-க்கும் கீழ் பதிவாகி வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 38 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சீனா, ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. அதே போல் இந்தியாவிலும் பாதிப்பு அதிகரிக்க கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.






