இந்தியாவில் எகிறும் கொரோனா: ஒருநாள் பாதிப்பு 7,830 ஆக அதிகரிப்பு

இந்தியாவில் நேற்று கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்து 676 ஆக குறைந்து இருந்த நிலையில் இன்று பாதிப்பு 7,830- ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் எகிறும் கொரோனா: ஒருநாள் பாதிப்பு 7,830 ஆக அதிகரிப்பு
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதால் மாஸ்க் அணிவது சில மாநிலங்களில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் மருத்துவமனைக்கு வருபவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்து 676 ஆக குறைந்து இருந்த நிலையில் இன்று பாதிப்பு 7,830- ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 40,215- ஆக உள்ளது. இந்தியாவில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 5,676 ஆக பதிவாகி இருந்தது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,47,76,002 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com