டெல்லியில் மேலும் 378- பேருக்கு கொரோனா


டெல்லியில் மேலும் 378- பேருக்கு கொரோனா
x

டெல்லியில் நேற்று 498- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 378- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் தொற்று பாதிப்பு விகிதம் 6.06 சதவிகிதமாக உள்ளது. டெல்லியில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 19 லட்சத்து 44 ஆயிரத்து 393- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று இருவர் உயிரிழந்து உள்ளனர்.

இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 26, 294- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலைக் கண்டறிய இன்று பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 6,326-ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் நேற்று 498- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. டெல்லியில் பாதிப்பு விகிதம் 3.57 ஆக உயர்ந்துள்ளது.


Next Story