இந்திய அரசு மீதான சைபர் தாக்குதல்கள் 95 சதவீதம் அதிகரிப்பு


இந்திய அரசு மீதான சைபர் தாக்குதல்கள் 95 சதவீதம் அதிகரிப்பு
x

இந்திய அரசுத் துறை மீதான சைபர் தாக்குதல்கள் 95 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

இந்திய அரசுத் துறை மீதான சைபர் தாக்குதல்கள் 95 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022 ஆம் ஆண்டின், இரண்டாம் பாதியில் சைபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டை விட 2022ஆம் ஆண்டில் இந்திய அரசின் துறைகள் மீது சைபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என்று சைபர்-செக்யூரிட்டி நிறுவனமான கிளவுட் எஸ்இகே தெரிவித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டை விட 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் சைபர் தாக்குதல்கள் 95 சதவீதம் அதிகரித்துள்ளன.

இந்திய அரசாங்க நிறுவனங்கள் மீதான மொத்த சைபர் தாக்குதல்களில், கடந்த 2021 இல் 6.3 சதவீதம் இல் இருந்து 2022 இல் 13.7 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது, இது உலகளவில் சைபர் கிரிமினல்களுக்கு, எளிதாக இலக்கு வைக்கப்படும் நாடாக இந்தியா மாறியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story