நேற்று மசாஜ்; இன்று வெரைட்டி உணவு - ஜெயிலில் சுக போக வாழ்க்கை அனுபவிக்கும் டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின்...!


நேற்று மசாஜ்; இன்று வெரைட்டி உணவு - ஜெயிலில்  சுக போக வாழ்க்கை அனுபவிக்கும் டெல்லி மந்திரி  சத்யேந்தர் ஜெயின்...!
x
தினத்தந்தி 23 Nov 2022 5:42 AM GMT (Updated: 23 Nov 2022 12:11 PM GMT)

ஜெயிலில் சொகுசாக கால்மேல் கால் போட்டு ஹோட்டல் உணவு சாப்பிடும் டெல்லிமந்திரி சத்யேந்தர் ஜெயின் சாப்பிட்டு மகிழும் புதிய சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுடெல்லி,

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ பதிவு செய்த எப்ஐஆா் அடிப்படையில் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி மந்திரி சத்யேந்தா் ஜெயின் மற்றும் அங்குஷ் ஜெயின் மற்றும் வைபவ் ஜெயின் ஆகியோருக்கு எதிரான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சத்யேந்தர் ஜெயினின் ஜாமீன் மனுவை கடந்த வியாழக்கிழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சில தினங்களுக்கு முன் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின் மசாஜ் செய்துகொள்ளும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜெயினுக்கு மசாஜ் செய்யும் நபா் ரிங்கு 2021-இல் ஜேபி காலன் பகுதியில் மைனா் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவா் பிசியோதெரபிஸ்ட் இல்லை' என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியையும் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலையும் பாஜகவும் காங்கிரஸும் கடுமையாக விமா்சித்தது.

இந்தநிலையில் சத்யேந்தர் ஜெயின் 28 கிலோ எடையைக் குறைத்ததாகக் கூறிய மறுநாள், திகாா் சிறையில் மந்திரி சத்யேந்தா் ஜெயின் ஒட்டலில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள வெரைட்டி உணவுகளை சாப்பிட்டு மகிழும் புதிய சிசிடிவி விடியோ காட்சி பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


Next Story