ஆசிட் வீச்சு எதிரொலி: டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ்


ஆசிட் வீச்சு எதிரொலி: டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ்
x

டெல்லியில் 17 வயது சிறுமி மீது ஆசிட் வீசப்பட்ட சம்வத்தின் எதிரொலியாக உள்துறை அமைச்சகத்திற்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

புதுடெல்லி,

டெல்லி தெற்கு துவாரகா பகுதியில் இன்று காலை 9 மணியளவில் 17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீசப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் மீது ஆசிட்டை வீசி இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ளனர். இதில் அவரது முகம், கண்களில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதை தொடர்ந்து அந்த மாணவி சப்தர்ஜங் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், டெல்லியில் 17 வயது சிறுமி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தையடுத்து டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சில்லறை விற்பனையில் ஆசிட் விற்பதை தடை செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க கோரி மகளிர் ஆணையம் உள்துறை அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

1 More update

Next Story