அசாமில் செங்கல் சூளை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!
அசாமில் செங்கல் சூளை புகைபோக்கி இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
கவுகாத்தி,
அசாமின் கச்சார் மாவட்டத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில், புகைபோக்கி இடிந்து விழுந்ததில் 12 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர்.
கச்சார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நுமல் மஹத்தா கூறுகையில், "சில்சார் நகரத்திலிருந்து சுமார் 29 கிமீ தொலைவில் உள்ள கலயான் பகுதியில் வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது.
காயமடைந்த மேலும் 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது" என்று கச்சார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நுமல் மஹத்தா தெரிவித்தார்.
Related Tags :
Next Story