கர்நாடக பா.ஜனதா தலைவராக சி.டி.ரவியை நியமிக்க முடிவு?


கர்நாடக பா.ஜனதா தலைவராக சி.டி.ரவியை நியமிக்க முடிவு?
x

கர்நாடக பா.ஜனதா தலைவராக சி.டி.ரவியை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:

கர்நாடக மாநில பா.ஜனதா மாநில தலைவராக இருந்து வருபவர் நளின்குமார் கட்டீல். அவரது பதவிக்காலம் வருகிற 20-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், புதிய மாநில தலைவரை நியமிக்க பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளராக இருக்கும் சி.டி.ரவி புதிய தலைவராக நியமிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், புதிய தேசிய பொதுச்செயலாளராக பன்சல் நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஏற்கனவே பா.ஜனதாவில் 8 பேர் பொதுச்செயலாளராக உள்ளனர். தற்போது பன்சலும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் சி.டி.ரவியிடம் இருந்து பொதுச்செயலாளர் பதவியை பறித்து விட்டு, நளின்குமார் கட்டீலின் பதவிக்காலம் முடிந்ததும் புதிய தலைவராக சி.டி.ரவி நியமிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக இருப்பதால், ஒக்கலிக சமுதாயத்தை சேர்ந்த சி.டி.ரவி மாநில தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

1 More update

Next Story