அயோத்தி சரயு நதிக்கரையில் 14 லட்சம் தீபங்கள் ஏற்ற திட்டம்


அயோத்தி சரயு நதிக்கரையில்  14 லட்சம் தீபங்கள் ஏற்ற திட்டம்
x

அயோத்தியா-உத்தர பிரதேசத்தில் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தின் போது, 14 லட்சம் தீபங்கள் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

உத்தர பிரதேச முதல்-மந்திரியாக யோகி ஆதித்யநாத் 2017ல் பதவியேற்றவுடன், தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள், 'தீபோத்ஸவ்' எனப்படும் தீபத் திருவிழாவை அறிவித்தார். அந்த ஆண்டு, அயோத்தி நகரின் சரயு நதிக்கரையில் 51 ஆயிரம் தீபங்கள் ஏற்றப்பட்டன. அடுத்து, 2019ல் 4.10 லட்சம்; 2020ல் 9 லட்சத்துக்கும் அதிகமான தீபங்கள் ஏற்றப்பட்டு, கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.இந்த ஆண்டு, தீபாவளிப் பண்டிகைக்கு முதல் நாளான அக்., 23ல் 14 லட்சம் தீபங்கள் ஏற்ற திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, உ.பி.,யின் மண்பாண்ட தொழிலாளர்கள் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.


Next Story