ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் மீது மானநஷ்ட வழக்கு- மந்திரி முனிரத்னா பேட்டி


ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் மீது மானநஷ்ட வழக்கு-  மந்திரி முனிரத்னா பேட்டி
x

ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் மீது மானநஷ்ட வழக்கு தொடருவதாக மந்திரி முனிரத்னா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: தோட்டக்கலைத்துறை மந்திரி முனிரத்னா மீது ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா, 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதை முனிரத்னா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் நிருபா்களுக்கு அளித்த பேட்டியில், 'நான் கமிஷன் கேட்டதாக ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா கூறியுள்ளார்.

அதற்கு அவர் ஆவணங்களை வழங்க வேண்டும். ஒருவேளை ஏதாவது ஆவணங்கள் இருந்தால் லோக்அயுக்தாவில் புகார் வழங்க வேண்டும். அதை விடுத்து என் மீது தவறான குற்றச்சாட்டை கூறியுள்ளார். கெம்பண்ணாவுக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடர்வேன்' என்றார்.

1 More update

Next Story