டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதால் சில கட்டுப்பாடுகளை விலக்கி கொள்ள முடிவு!


டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதால் சில கட்டுப்பாடுகளை விலக்கி கொள்ள முடிவு!
x

டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதால் அங்கு விதிக்கப்பட்டுள்ள சில தடைகளை விலக்கிக்கொள்வது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், மக்கள் சுவாசிக்கக் கூட முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

காற்று தர குறியீடு மோசமடைந்துள்ள சூழலில், லேடி ஹார்டிங்கே மருத்துவமனை மற்றும் கலாவதி மருத்துவமனை ஆகியவற்றில் சுவாச கோளாறுகளால் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 40 முதல் 50 சதவீதம் அதிகரித்து உள்ளது.

இன்று காலை நிலவரப்படி டெல்லியின் காற்றின் தரக் குறியீடு 348 என்ற அளவில் பதிவாகியுள்ளது. அதாவது டெல்லி முழுவதும் காற்றின் தரம் தொடர்ந்து 'மிகவும் மோசம்' என்ற நிலையில் நீடிக்கிறது.ஆனால் கடந்த சில தினங்களை ஒப்பிடுகையில், காற்றின் தரம் மேம்பட்டுள்ளது.

காற்று மாசு அதிகரிப்பதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்துள்ளது. அதன்படி, ராஜஸ்தானில் செயல்பட்டு வரும் 45 நிலக்கரி சார்ந்த தொழில் ஆலைகளை உடனடியாக மூடுமாறு காற்றின் தர மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல, டெல்லியின் அண்டை மாநிலங்களான அரியானாவில் 17, உத்தரபிரதேசத்தில் 63 ஆலைகள் மூடப்பட்டுள்ளன.மேலும், டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுமானப் பணி(செண்டிரல் விஸ்டா திட்டம்) மற்றும் தேச நலனுக்கான அத்தியாவசிய கட்டிட பணிகள் தவிர்த்து பிற கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதால் அங்கு விதிக்கப்பட்டுள்ள சில தடைகளை விலக்கிக்கொள்வது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதில் ஸ்டேஜ்-4 என்றழைக்கப்டும் தீவிர கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஸ்டேஜ்-3 கட்டுப்பாடுகள் தொடரும். அதன் கீழ், இனிமேல் லாரிகள் போன்ற வாகனங்கள் டெல்லி மற்றும் அண்டை பகுதிகளுக்குள் நுழைய தடை விலக்கிகொள்ளப்படும்.


Next Story