தேசியக்கோடியை 'பைக்' துடைக்கும் துணியாக பயன்படுத்திய நபர்

தேசியக்கோடியை ‘பைக்’ துடைக்கும் துணியாக பயன்படுத்திய நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேசியக்கோடியை 'பைக்' துடைக்கும் துணியாக பயன்படுத்திய நபர்
Published on

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியின் பஜன்புரா பகுதியை சேர்ந்த 52 வயதான நபர் தனது பைக்கை துடைக்கும் துணியாக தேசியக்கோடியை பயன்படுத்தியுள்ளார்.

தேசியக்கொடியை மடித்து அதை பைக் துடைக்க பயன்படுத்தியுள்ளார். அந்த நபர் தனது பைக்கை மடிக்கப்பட்ட தேசியக்கொடி துணியை கொண்டு துடைக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

இதையடுத்து, அந்த நபரை பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தான் வேண்டுமென்றே இவ்வாறு செய்யவில்லை என்றும் இது தவறுதலாக நடந்துவிட்டதாகவும் அந்த நபர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com