டெல்லி தேர்தலில் போட்டியிட சீட் மறுப்பு; மின் கோபுரத்தில் ஏறிய முன்னாள் கவுன்சிலரால் பரபரப்பு


டெல்லி தேர்தலில் போட்டியிட சீட் மறுப்பு; மின் கோபுரத்தில் ஏறிய முன்னாள் கவுன்சிலரால் பரபரப்பு
x

டெல்லி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட சீட் வழங்காத அதிருப்தியில் முன்னாள் ஆம் ஆத்மி கவுன்சிலர் மின்கோபுரத்தில் ஏறி பரபரப்பு ஏற்படுத்தினார்.



புதுடெல்லி,


டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. வருகிற டிசம்பர் 4-ந்தேதி 250 வார்டுகளுக்கான டெல்லி மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இதில், பா.ஜ.க. மற்றும் ஆளும் ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி காணப்படுகிறது. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடும் 117 வேட்பாளர்கள் அடங்கிய 2-வது பட்டியலை ஆம் ஆத்மி நேற்று வெளியிட்டது.

அதற்கு முன் கடந்த வெள்ளி கிழமை 134 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

ஆனால், இந்த பட்டியலில் போட்டியிட முன்னாள் ஆம் ஆத்மி கவுன்சிலரான ஹசீப்-உல்-ஹசனுக்கு இந்த முறை வாய்ப்பு அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், அவர் திருப்தியில் இருந்து உள்ளார்.

இந்நிலையில், அவர் இன்று சாஸ்திரி பார்க் மெட்ரோ ரெயில் நிலையம் பகுதிக்கு வந்துள்ளார். அவர், தனது அதிருப்தியை கட்சிக்கு தெரிவிக்கும் வகையில், அருகே இருந்த உயர்மின் கோபுரம் மீது ஏறினார்.

இதனை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவரை கீழே இறங்கும்படி, உள்ளூர்வாசிகள் கூறினர். தகவல் அறிந்து, போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அந்த பகுதியில் கூடியுள்ளனர். அவரை மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story