ரூ.3.60 கோடி செலவில் வளர்ச்சி திட்டப்பணிகள்; அன்னதாணி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
ஹலகூருவில் ரூ.3.60 கோடி செலவில் வளர்ச்சி திட்டப்பணிகளை அன்னதாணி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
ஹலகூர்;
மண்டியா மாவட்டம் ஹலகூர் அருகே பையப்பனதொட்டி கிராமத்தில் ரூ.3.60 கோடி செலவில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் அன்னதானி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வளர்ச்சி திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
புய்யனதொட்டி கிராமத்தில் சுத்தமான குடிநீர் ஆலை மற்றும் சாமண்டிபூர், ஹலசஹள்ளி, ஹலகூர், வளகெரேத்தொட்டி பகுதிகளில் சாலை, கழிவுநீர் கால்வாய் மற்றும் சாமண்டியூரில் 105 வீடுகள், ஹலசஹள்ளி 175 வீடுகள், நிட்டூரில் 162 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு மற்றும் குடிநீர் தொட்டிகள் கட்டி கொடுக்கப்படும். இதற்காக ரூ.3.60 கோடி வரை செலவாகும். இதற்கான நிதியை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story