குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு


குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு
x

குளத்தில் மூழ்கி சிறுவன் பலியானான்.

கொப்பல்:

கொப்பல் மாவட்டம் காரடகி தாலுகா ஈலிகரனூரு கிராமத்தை சேர்ந்த தம்பதியின் மகன் நந்தகுமார்(வயது 13). கிராமத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, கிராமத்தில் உள்ள குளம் நிரம்பி வழிந்தது. குளத்தில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது. இதனை பார்ப்பதற்காக நந்தகுமார் தனது சகோதரருடன் குளத்திற்கு சென்றிருந்தான்.


குளத்தின் கரைப்பகுதியில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த போது, எதிர்பாராத விதமாக நந்தகுமார் உள்ளே தவறி விழுந்தான். இதனால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சகோதரர் கிராமமக்களுக்கு தெரிவித்தனர். அவா்கள் ஓடிவந்து நந்தகுமாரை காப்பாற்ற முயன்றனர்.


கனமழை காரணமாக குளத்தில் தண்ணீர் நிரம்பி வழிந்ததால், சிறுவன் நந்தகுமார் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டான். அவனது உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர். இதுகுறித்து காரடகி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story