தோண்ட, தோண்ட திடுக்... உல்லாசம், ஆபாச தளத்தில் வீடியோ; கல்லூரி மாணவி செயலால் முதியவர் தற்கொலை


தோண்ட, தோண்ட திடுக்... உல்லாசம், ஆபாச தளத்தில் வீடியோ; கல்லூரி மாணவி செயலால் முதியவர் தற்கொலை
x

அசாமில் உல்லாச வீடியோவை, ஆபாச தளத்தில் பரப்பிய கல்லூரி மாணவி செயலால் 65 வயது முதியவர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்.

கவுகாத்தி,

அசாமின் ஜோர்ஹத் பகுதியை சேர்ந்தவர் தீபன் கலிதா (வயது 65). இவர் கல்லூரி மாணவி ஒருவருடன் உல்லாசத்தில் ஈடுபட்டு உள்ளார். அவரது இந்த வீடியோ பல்வேறு ஆபாச தளங்களில் வந்து உள்ளது.

ஆபாச வலைத்தளங்களில் வீடியோவை பார்த்த அவரது வீட்டுக்கு பக்கத்தில் வசிப்பவர்கள் பலர் அதில், இவரது வீடியோவை பார்த்து அதிர்ந்து உள்ளனர். இதன்பின், நேராக தீபனின் குடும்பத்தினரிடம் சென்று அந்த வீடியோவை அவர்கள் காட்டி உள்ளனர்.

அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், அந்த கல்லூரி மாணவி மீது போலீசில் புகார் அளித்து உள்ளனர். ஆபாச தளத்தில் வீடியோ பரவல், விவகாரம் போலீஸ் வரை சென்றது என விரக்தியில் இருந்த முதியவர் தற்கொலை செய்து உள்ளார்.

இதுபற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளரான மோகன்லால் மீனா கூறும்போது, விசாரணையில் தேவி சரண் கல்லூரியை சேர்ந்த தர்சனா பராலி என்ற மாணவியும், சந்திர கமல் பெஜ்பருவா வர்த்தக கல்லூரியில் படித்து வரும் அபிசேக் காஷ்யப் இருவரும் உறவில் இருந்து வந்து உள்ளனர்.

இவர்கள் இருவரும், இதுபோன்ற வீடியோக்களை எடுப்பதும், பின்னர் அதனை சர்வதேச ஆபாச தளங்களில் காஷ்யப் பதிவேற்றுவதும் வழக்கம். இந்த வழக்கில் காஷ்யப்புக்கு தெரிந்த யாரோ சிலர் வீடியோவை ஆபாச தளத்தில் பதிவேற்றி உள்ளனர்.

அதன்பின், அதனை பார்த்த உள்ளூர்வாசிகள் வீடியோவை தீபனிடம் காட்டி உள்ளனர். இதனால், மனமுடைந்து காணப்பட்ட அவர் பின்பு வீட்டில் மரணம் அடைந்து கிடந்து உள்ளார். அது தற்கொலை என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த வழக்கில் கல்லூரி மாணவர்கள் மற்றும் கிஷாலே சர்மா என்று 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணையில், காஷ்யப்பின் லேப்டாப்பில் பல்வேறு ஆண்களுடன் தர்சனா உல்லாசத்தில் ஈடுபடும் வீடியோக்கள் உள்ளன.

அவர்கள் இந்த வீடியோக்களை பயன்படுத்தி பணம் சம்பாதித்து இருக்க கூடும். அதனால், அவர்களின் வங்கி கணக்கு விவரங்களை விசாரிக்க இருக்கிறோம் என காவல் அதிகாரி கூறியுள்ளார்.

எனினும், சட்டவிரோத ஆபாச தளங்களில் உல்லாச வீடியோவை பதிவேற்றியதற்காக காஷ்யப்புக்கு எதிராக தர்சனாவும் போலீசில் புகார் அளித்து உள்ளார். இவர்கள் 3 பேருக்கும் 20 முதல் 21 வயதுக்குள் இருக்கும். இந்த விசயத்தில் வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அவர் கூறியுள்ளார். பின்னர் 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி உள்ளனர்.


Next Story