72 பள்ளி ஆசிரியர்கள் அதிரடி பணிநீக்கம்
டெல்லி ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2018-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தியது.
புதுடெல்லி,
டெல்லி ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2018-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தியது. இதில் வெற்றி பெற்றவர்கள் பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் தேர்வின்போது அளித்த புகைப்படங்கள் மற்றும் கைவிரல் ரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் அடையாளங்கள் பின்னர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 72 ஆசிரியர்களின் புகைப்படம் மற்றம் பயோமெட்ரிக் அடையாளங்கள் பொருந்தவில்லை. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மேற்படி ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்திருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த 72 ஆசிரியர்களையும் டெல்லி கல்வித்துறை அதிரடியாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது. கல்வித்துறையின் நடவடிக்கைக்கு உள்ளான இந்த 72 பேரில் பெண்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story