தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.பி. என தனது டுவிட்டர் பக்கத்தில் மாற்றம் செய்த ராகுல் காந்தி
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி. என ராகுல் காந்தி மாற்றம் செய்துள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரசின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, கர்நாடகாவின் கோலார் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இதில், சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அவதூறு வழக்கில் கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக நீடித்து வந்த ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது.
இதனை தொடர்ந்து, வயநாடு தொகுதியில் நேற்று கருப்பு தினம் கடைப்பிடிக்கப்படும் என காங்கிரஸ் அறிவித்தது. பல்வேறு இடங்களில் போராட்டமும் நடைபெற்றது. சுப்ரீம் கோர்ட்டில் இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்யவும் கட்சி முடிவு செய்து உள்ளது
இந்த நிலையில் தனது டுவிட்டர் பயோ எனப்படும் சுயவிவர குறிப்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி. என ராகுல் காந்தி மாற்றம் செய்துள்ளார்.