நமது ராணுவ வீரர்களை அவமரியாதை செய்ய வேண்டாம்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
கடும் குளிரிலும் எல்லையை பாதுகாக்கும் வீரர்களுக்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
புதுடெல்லி,
இந்திய - சீன எல்லை மோதல் தொடர்பாக மக்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: - சீன எல்லையை ஒட்டிய பகுதிகளில் நமது ராணுவம் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 13 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள யாங்ஸ்டீ என்ற பகுதியிலும் நமது ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
கடும் குளிரிலும் எல்லையை பாதுகாக்கும் வீரர்களுக்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும். நாம் நமது ராணுவ வீரர்களை அவமதிக்கக் கூடாது. இந்திய - சீன எல்லையை அண்டை நாடு தன்னிச்சையாக மாற்ற நமது ராணுவம் விட்டுவிடாது" என்றார்.
Related Tags :
Next Story