பா.ஜனதாவில் மந்திரி ஆர்.அசோக்கிற்கு மரியாதை உள்ளதா?- காங்கிரஸ் கேள்வி


பா.ஜனதாவில் மந்திரி ஆர்.அசோக்கிற்கு மரியாதை உள்ளதா?-  காங்கிரஸ் கேள்வி
x

பா.ஜனதாவில் மந்திரி ஆர்.அசோக்கிற்கு மரியாதை உள்ளதா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-எடியூரப்பா சிகாரிபுரா தொகுதியில் தனது மகன் போட்டியிடுவார் என்று அறிவித்தார். கட்சி மேலிடத்தின் மிரட்டலுக்கு பணிந்து அவர் தனது முடிவை வாபஸ் பெற்றார். நிலைமை இவ்வாறு இருக்க பா.ஜனதாவில் மந்திரி ஆர்.அசோக்கின் கருத்துக்கு மரியாதை உள்ளதா?. மந்திரி அஸ்வத் நாராயணுக்கு கிடைக்கிற மரியாதை கூட ஆா்.அசோக்கிற்கு இல்லை.

பா.ஜனதா ஆட்சியில் 40 சதவீத கமிஷன் முறைகேடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மீறி "ஊழல் வளர்ச்சி ஆணையம்" (பெங்களூரு வளர்ச்சி ஆணையம்) பா.ஜனதாவினருக்கு வீட்டுமனைகளை ஒதுக்கீடு செய்துள்ளது. பசவராஜ் பொம்மையின் நேர்மையான ஆட்சி நிர்வாகம் இதுதானா?.

இவ்வாறு காங்கிரஸ் தெரிவித்துள்ளது.


Next Story