தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை - பா.ஜ.க. மேலிடத்திற்கு கம்பீர் தகவல்


தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை - பா.ஜ.க. மேலிடத்திற்கு கம்பீர் தகவல்
x

image courtesy; PTI

தினத்தந்தி 2 March 2024 6:05 AM GMT (Updated: 2 March 2024 6:14 AM GMT)

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான கம்பீர் டெல்லி கிழக்கு தொகுதியில் எம்.பி. ஆக உள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும், டெல்லி கிழக்கு தொகுதியில் பா.ஜ.க. எம்.பி.ஆக இருப்பவருமான கவுதம் கம்பீர், கிரிக்கெட் பொறுப்புகளில் கவனம் செலுத்த உள்ளதால் அரசியலில் இருந்து தன்னை விடுவிக்குமாறு ஜே.பி. நட்டாவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், 'கிரிக்கெட் பொறுப்புகளில் கவனம் செலுத்த உள்ளதால் அரசியல் பணியில் இருந்து என்னை விடுவிக்குமாறு பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை கேட்டுக் கொள்கிறேன். மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு அளித்த பிரதமர் மோடிக்கும், உள்துறை மந்திரி அமித்ஷாவிற்கும் மனமார்ந்த நன்றி. ஜெய்ஹிந்த்!' என்று பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் கம்பீர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்ற தகவலை சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story