மிசோரமில் ரூ.7.39 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல், 7 பேர் கைது
மிசோரமில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.7.39 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கவுகாத்தி,
மிசோரம் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.7.39 கோடி மதிப்பிலான போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பொருட்களான மெத்தம்பேட்டமைன் மாத்திரைகள், ஹெராயின் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகள் மியான்மரில் இருந்து கடத்தப்பட்டவை என்று அதிகாரிகள் தெரிவித்தனர், சோதனைகளின் போது ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐஸ்வால் மாவட்டத்தில் உள்ள துய்குர்ஹ்லுவில் நடந்த சோதனையின் போது, 6.66 கோடி ரூபாய் மதிப்புள்ள 20,000 மெத்தம்பெட்டமைன் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
மற்றொரு நடவடிக்கையில், மியான்மர் எல்லையில் உள்ள சம்பாய் மாவட்டத்தில் உள்ள சோகாவ்தர் கிராமத்தில் ரூ.41.60 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை அசாம் ரைபிள்ஸ் படை கைப்பற்றியது.
மியான்மரின் எல்லை வழியாக மிசோரமிற்கு அதிக அளவில் மெத்தம்பேட்டமைன் மாத்திரைகள் மற்றும் பல்வேறு போதைப்பொருள்கள் கடத்தப்படுகின்றன.