குடிபோதையில், மின்கம்பத்தில் ஏறி தொழிலாளி அட்டகாசம்


குடிபோதையில், மின்கம்பத்தில்   ஏறி தொழிலாளி அட்டகாசம்
x

குடிபோதையில், மின்கம்பத்தில் ஏறி தொழிலாளி அட்டகாசம் செய்தார்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் கலநாயக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஒபன்னா(வயது 40). தொழிலாளியான இவர், அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒபன்னா மதுஅருந்திவிட்டு குடிபோதையில் ஊருக்குள் வந்து அங்குள்ள மின்கம்பத்தில் ஏறி கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், அவரை கீழே இறங்கி வரும்படி கூறியுள்ளனர். இதற்கிடையே தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர் மின்இணைப்பை துண்டித்தார். இதைதொடர்ந்து ஒபன்னா, மின்கம்பத்தில் ஏறி மின்வயரை பிடித்துக்கொண்டு நடனம் ஆடியுள்ளார். இதையடுத்து பொதுமக்கள், உறவினர்கள் ஒபன்னாவிடம் மதுபானம் வாங்கி தருவதாக கூறியபிறகு அவர் கீழே இறங்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


Next Story