சத்தீஷ்கரில் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டதில் ஏட்டு பலி


சத்தீஷ்கரில் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டதில் ஏட்டு பலி
x

சத்தீஷ்கரில் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டதில் ஏட்டு பலியாகினார்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கர் மாநிலம் காங்கர் மாவட்டம் பானுபிரதாப்பூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்று முடிவு வெளியானது. என்றாலும் ஓட்டுபெட்டி 45 நாட்கள் பாதுகாப்புடன் வைப்பது வழக்கம்.

அதன்படி அங்குள்ள அரசு மருத்துவ கல்லூரி அறையில் வைக்கப்பட்டது. ஆயுதப்படை போலீஸ் ஏட்டு சுரேந்திர பகத் மற்றும் போலீஸ்காரர் புருஷோத்தம் சிங் ஆகியோர் அறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் திடீரென இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த புருஷோத்தம் சிங் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் ஏட்டு சுரேந்திர பகத்தை சரமாரியாக சுட்டார். இதில் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பகத் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உயர்அதிகாரிகள் மற்றும் போலசீார் புருஷோத்தம் சிங்கை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். பாதுகாப்பு பணியின்போது, போலீஸ் ஏட்டை சக போலீஸ்காரர் சுட்ட சம்பவம் போலீசார் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story