கர்நாடகா தேர்தலில் தென்னாப்பிரிக்காவில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரமா...? தேர்தல் ஆணையம் விளக்கம்


கர்நாடகா தேர்தலில் தென்னாப்பிரிக்காவில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரமா...? தேர்தல் ஆணையம் விளக்கம்
x
தினத்தந்தி 12 May 2023 6:02 AM GMT (Updated: 12 May 2023 9:35 AM GMT)

ஒரு தேசிய அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.யின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டிய கடமை உள்ளது என தேர்தல் ஆணையம் கூறியது, "

புதுடெல்லி

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்திருந்தது. இந்த தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுககு தேவையான உணவு, தண்ணீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதுடன், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்வதற்காக பஸ்கள் என பல்வேறு வேலைகளை தேர்தல் ஆணையம் செய்திருந்தது.

இந்த நிலையில், 224 தொகுதிகளிலும் சட்டசபை தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் சுமார் ரூ.440 கோடியை செலவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. ஒரு தொகுதிக்கு மட்டும் ரூ.1.96 கோடியை தேர்தல் ஆணையம் செலவு செய்திருக்கிறது.கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்காக ரூ.394 கோடி செலவு செய்யப்பட்டு இருந்தது.

இந்த் நிலையில் கர்நாடகாவின் காங்கிரஸ் தேர்தல் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தேர்தல் ஆணையத்தற்கு கடித்தம் ஒன்று எழுதி இருந்தார். அதில்

தென்னாப்பிரிக்காவில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கர்நாடக தேர்தலில் பயன்படுத்தப்பட்டது குறித்தும், அதுவும் மறுமதிப்பீடு மற்றும் மறு சரிபார்ப்பு செயல்முறையை மேற்கொள்ளவில்லை.

எனவே, கர்நாடக தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இயக்கம் மற்றும் கர்நாடக தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாட்டின் ஒவ்வொரு கட்டத்திலும் காங்கிரஸ் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

தென்னாப்பிரிக்காவிற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒருபோதும் அனுப்பவில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. அந்த நாட்டில் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்பதை தென்னாப்பிரிக்காவின் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலம் எளிதாக சரிபார்க்க முடியும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

"எனவே, தென்னாப்பிரிக்கா தேர்தல்களில் அல்லது உலகில் எங்கும் பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்தக்கூடிய எந்தவொரு இயந்திரத்தையும் கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் பயன்படுத்தவில்லை என்று கூறி உள்ளது.

"கர்நாடகா தேர்தல், 2023 இல் பயன்படுத்தப்படும் அனைத்து வாக்குப்பதிவு எந்திரகளும் அனைத்தும் புதிய வாக்குப்பதிவு எந்திரங்கள். இந்த உண்மை காங்கிரஸ் கட்சிக்கு நன்றாகவேத் தெரியும்" என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் எந்த நாட்டிலிருந்தும் வாக்குப்பதிவு எந்திரம் இறக்குமதி செய்யவில்லை என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

ஒரு தேசிய அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.யின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டிய கடமை உள்ளது என தேர்தல் ஆணையம் கூறியது, "ஆதாரங்களை' நம்பி காங்கிரஸ் இந்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அதிலும் வாக்கெடுப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன் இதுபோன்ற கேள்விகளும் சந்தேகங்கள் எழுப்புவதும் கவலையளிப்பதாக தேர்தல் ஆணையம் கூறியது.


Next Story