குஜராத் சட்டசபை தேர்தல்: ரூ.290 கோடி ரொக்கம், போதைப்பொருள் பறிமுதல் - தேர்தல் ஆணையம் அதிரடி


குஜராத் சட்டசபை தேர்தல்: ரூ.290 கோடி ரொக்கம், போதைப்பொருள் பறிமுதல் - தேர்தல் ஆணையம் அதிரடி
x

கோப்புப்படம்

குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி ரூ.290 கோடி ரொக்கம் மற்றும் போதைப்பொருளை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்தது.

ஆமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் 182 இடங்களை கொண்ட சட்டசபை இன்று (வியாழக்கிழமை) மற்றும் வருகிற 5-ந்தேதி என இருகட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் குஜராத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததில் இருந்து இப்போது வரை ரொக்கம், மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருட்கள் என ரூ.290 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இது கடந்த 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை விட 10 மடங்கு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story