மராட்டிய முன்னாள் மந்திரியின் ரூ.10 கோடி சொத்துகள் முடக்கம் அமலாக்கத்துறை நடவடிக்கை


மராட்டிய முன்னாள் மந்திரியின் ரூ.10 கோடி சொத்துகள் முடக்கம் அமலாக்கத்துறை நடவடிக்கை
x

மராட்டிய முன்னாள் மந்திரி அனில் பரப் தொடர்புடைய ரூ.10 கோடிக்கு அதிகமான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மும்பை,

சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்தவர் அனில் பரப். 58 வயதான இவர், உத்தவ் தாக்கரே அரசில் மாநில போக்குவரத்து மற்றும் சட்டசபை விவகாரங்கள் துறை மந்திரியாக பதவி வகித்தவர்.

உத்தவ் தாக்கரேக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் இவர் மீது ரத்னகிரி மாவட்டம் தாபோலி பகுதியில் கடலோர கட்டுப்பாட்டு மண்டல விதிகளை மீறி சொகுசு பங்களா கட்டியதாகவும், இதில் முறைகேடு நடந்ததாகவும் புகார் எழுந்தது. இந்த வழக்கை அமலாகத்துறை விசாரித்து வருகிறது. இந்தநிலையில் அமலாக்கத்துறை நேற்று வெளியிட்ட தகவலில் மந்திரி அனில் பரப் தொடர்புடைய ரூ.10 கோடிக்கு அதிகமான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story