டெல்லி அரசின் நல்ல செயல்களை தடுக்க முயற்சி - மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு

டெல்லி துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா வீட்டில் காலை முதல் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
டெல்லி அரசின் நல்ல செயல்களை தடுக்க முயற்சி - மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு
Published on

புதுடெல்லி,

டெல்லி துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா வீட்டில் காலை முதல் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மணிஷ் சிசோடியாவின் வீடு உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வந்த நிலையில், 14 மணி நேர சோதனைக்கு பிறகு டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா வீட்டில் இருந்து சிபிஐ அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.

இந்தநிலையில், டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

டெல்லி அரசின் நல்ல செயல்களை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. அவர்கள் சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கவில்லை. எனது கணினி, தொலைபேசி மற்றும் சில கோப்புகளை சிபிஐ கைப்பற்றியுள்ளது என்றார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com