மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு


மின்சாரம் தாக்கி   தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 9 Nov 2022 6:45 PM GMT (Updated: 9 Nov 2022 6:45 PM GMT)

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.

பெங்களூரு: கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி கோர்ட்டு வீதியில் உள்ள சஞ்சய்நகரை சேர்ந்தவர் பிரசாந்த் ஆச்சார்யா(வயது 40). தொழிலாளி. இவர், நேற்றுமுன்தினம் மாலை மலேபெட்டுவை சேர்ந்த சதீஷ் ஆச்சார்யா என்பவருடன் வேலைக்கு சென்றார். பெல்தங்கடி மெயின் மார்க்கெட் சாலை பகுதியில் வேலை செய்த பிரசாந்த் ஆச்சார்யா ஏணியை எடுத்துள்ளார். அப்போது ஏணி, அந்த வழியாக சென்ற மின்வயர் மீது உரசியுள்ளது. இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அவரை காப்பாற்ற சதீஷ் ஆச்சார்யா முயன்றார்.

ஆனால் மின்சாரம் தாக்கியதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை, அப்பகுதியினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரசாந்த் ஆச்சார்யா பரிதாபமாக உயிரிழந்தார். சதீஷ் ஆச்சார்யாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பெல்தங்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர்.


Next Story