மின்னணு வாக்குப்பதிவு எந்திர பாதுகாப்பு கட்டிடம்


மின்னணு வாக்குப்பதிவு எந்திர பாதுகாப்பு கட்டிடம்
x

சிக்கமகளூருவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பாதுகாப்பு கட்டிடத்தை கலெக்டர் ரமேஷ் திறந்து வைத்தார்.

சிக்கமகளூரு:-

சிக்கமகளூரு மாவட்டம் சகுனிபுரா பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாக்கும் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ரமேஷ், முதன்மை செயல் அதிகாரி பிரபு, போலீ்ஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கட்டிடத்தை திறந்து வைத்து மாவட்ட கலெக்டர் ரமேஷ் பேசியதாவது:-

மத்திய தேர்தல் ஆணையம் 1998-ம் ஆண்டு முதல் மின்னணு வாக்கு எந்திரத்தை கொண்டு வந்து இந்தியாவில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையை வேறு நாட்டவர் இதுவரை அடைந்தது இல்லை. இங்கிலாந்து உள்பட சில நாடுகளில் இந்த நடைமுறை இல்லை.

இருப்பினும் பிற நாடுகளில் இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் முறைகளில் ஆர்வமாக உள்ளது. இந்தியாவிடம் கேட்டு தெரிந்து கொள்வதுடன், அந்த மின்னணு எந்திரங்களை பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர். இங்கிருந்துதான் பிற மாவட்டங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும். அதற்கான பயிற்சியும் இங்கேயே வழங்கப்படும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள்தான் இந்த மையம் இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story