ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு பூங்கா, இலவச வீடுகள் கட்டி கொடுக்கப்படும்


ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு பூங்கா, இலவச வீடுகள் கட்டி கொடுக்கப்படும்
x
தினத்தந்தி 26 Nov 2022 12:15 AM IST (Updated: 26 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூருவில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு பூங்கா, இலவச வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று நகரசபை தலைவர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு மாவட்டம் கெம்பனஹள்ளி பகுதியில் 2 ஏக்கர் பரப்பளவில் ஈத்கா மைதானம் உள்ளது. இந்த மைதானத்தின் நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து நகரசபை மற்றும் நகர வளர்ச்சித்துறை, வருவாய் துறைக்கு புகார்கள் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் நகரசபை மற்றும் நகர வளர்ச்சித்துறை சார்பில் ஈத்கா மைதானத்திற்கு ெசன்று நிலத்தை அளந்து பார்த்தனர். அந்த அளவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து நிருபர்களை சந்தித்து பேசிய நகரசபை தலைவர் வேணுகோபால் கூறியதாவது:-

ஈத்கா மைதானம் நகரசபை நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அது தொடர்பான ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால், அவை மீட்கப்படும். அந்த நிலத்தில் பூங்கா உருவாக்கப்படும். இல்லையென்றால் ஈத்கா மைதானத்திற்கே அந்த நிலம் வழங்கப்படும். இதேபோல உப்பள்ளியில் பிற பகுதிகளிலும் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்யப்படும். அங்கு ஆக்கிரமிப்பு நிலங்கள் இருந்தால் அதை மீட்டு பொதுமக்களுக்கு இலவச வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story